பொரு இல் ஆயமோடு அருவி ஆடி,
நீர் அலைச் சிவந்த பேர் அமர் மழைக் கண்
குறியா நோக்கமொடு முறுவல் நல்கி,
மனைவயின் பெயர்ந்த காலை, நினைஇய
நினக்கோ அறியுநள்- நெஞ்சே! புனத்த 5
நீடு இலை விளை தினைக் கொடுங் கால் நிமிரக்
கொழுங் குரல் கோடல் கண்ணி, செழும் பல,
பல் கிளைக் குறவர் அல்கு அயர் முன்றில்,
குடக் காய் ஆசினிப் படப்பை நீடிய
பல் மர உயர் சினை மின்மினி விளக்கத்து, 10
செல் மழை இயக்கம் காணும்
நல் மலை நாடன் காதல் மகளே?

ஒரு தோட்டம்.

அந்தப் பெரிய தோட்டத்தில் பெரியபெரிய பலாமரங்கள் இருக்கிறது.

அந்தப் பலாமரங்களில் பெரிய பெரிய பலாபழங்கள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. அந்தப் பலாமரங்களில் மின்மினிப்பூச்சிகள் அடைந்திருக்கின்றன. மின்மினிப் பூச்சிகள் நெருக்கமாகவும் இடைவெளியே இல்லாமலும் கசகசன்னு அடைந்திருக்கிறது.

மின்மினிப்பூச்சிகள் நெருக்கமாக கசகசன்னு அடைந்திருக்கிற அந்தப் பெரிய பலாமரங்களில் மின்மினிப் பூச்சிகளின் வெளிச்சம் அழகா நல்ல வெளிச்சமாருக்கு.

விவசாயிகள் அவர்கள் வீட்டின் முற்றத்தில் உட்கார்ந்து கொண்டு மின்மினிப் பூச்சிகளின் பிரகாசமான வெளிச்சத்தில் வானத்தை அண்ணாந்து பார்க்கிறார்கள்.

மின்மினிப் பூச்சிகளின் பிரகாசமான வெளிச்சத்தில் மழை மேகங்களின் இயக்கம் வானத்தில் எப்படி இருக்கிறது என்பதை அந்த ஊர் விவசாயிகள் துல்லியமாகத் தெரிந்துகொள்கிறார்கள்.

பெருங்கோசிகனார்
நற்றிணை 44