விமலாதித்தனின் சாட் பாக்ஸிலிருந்து

ஹேப்பி வேலண்டைன்ஸ் டே செல்லம்”

“உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் ஆன்லைன்ல பார்த்தது தவிற? எனக்கு வேலண்டைன்ஸ் டே வாழ்த்து சொல்லுற? அதுவும் செல்லம்?” (ஆங்கிரி ஈமோஜி)

“நீயே சொல்லுற இல்லை.. ஆன்லைன்ல “பார்த்ததுனு” தட்ஸ் ஆல். இதுக்கு மேல என்ன வேணும்? உனக்கு வாழ்த்து சொல்ல? செல்லம்னு கூப்பிட?”

“என் ப்ரோபைல் போட்டோ ஃபேக்”

“உனக்கு இன்னொரு ப்ரொபைல் கூட இருக்கு. அது எனக்குத் தெரியும்”

“என்னை ஸ்டாக்கிங் பண்ணுறியா?”

“இதுக்குப் பேரும் ஸ்டாக்கிங்கா?”

“பின்ன என்னவாம் இது?”

“ஒருத்தரைப் பிடிச்சா அவங்களைப் பத்தி தெரிஞ்சுக்கிறதுனுகூட எடுத்துக்கலாம்”

“ம்ம்ம்.. அப்படி என்ன என்னைப் பத்தி தெரிஞ்சுக்கிட்ட?”

(ஸ்மைலி ஈமோஜி)

“உனக்கு ஹரிஷ் கல்யாண் பிடிக்கும், ஊர் ஊரா சுத்த பிடிக்கும். ரோட்டுக்கடையில சாட் அயிட்டம் சாப்பிட்டா மாதிரி செல்பி போட பிடிக்கும். பலோசா பாப்கார்ன். அடிக்கடி போடுற டார்ன் ஜீன்ஸ். அந்த பர்பிள் டாப்ஸ். ரொம்ப பிடிச்ச அப்பா. அப்புறம் உன் பாய் பெஸ்டி சுதர்சன்.’

“ஹேய்.. ஸ்டாப் ஸ்டாப் ஸ்டாப்..  ஐ காண்ட் பிலிவ் இட்.”

“இன்னும் இருக்கு”

“இன்னுமா?”

“யெஸ்”

“இல்லை வேணாம்… எனக்கு உன்னை நினைச்சா பயமாயிருக்கு. ரொம்ப பர்சனலா கூட சொல்லிறிவியோனு?”

“ஏன் சொல்லக் கூடாதா?”

“ம்ம்.. அப்படி என்ன சொல்லுவ பார்க்கலாம்”

“நீ ஒரு வாட்டி ப்ரேக்கப் பண்ணியிருக்க. அந்தப் பையன் உன்னை ரொம்ப ஹர்ட் பண்ணியிருக்கான்’

 “…………………”

“என்ன பதிலே காணம் தப்பா சொல்லிட்டனா?’

“ஏய்.. உனக்கு யார் இதையெல்லாம் சொன்னா? அந்த கிரிஷ் உனக்கு ப்ரெண்டா?”

“சே..ச்சே.. நீ வேணா அவன் ஐடிலயோ என் ஐடிலயோ பாரோ. வி ஆர் நாட் அட் ஆல் மீயூச்சுவல்”

“நான் அவனை ப்ளாக் பண்ணிட்டேன். சரி வேற என்ன தெரியும் சொல்லு?”

“உனக்கு பின் கழுத்துல ஒரு மச்சம் இருக்கு”

“ஹே.. இட்ஸ் டூ மச்”

“சின்னதா ஒரு ஆர்ட்டின் மாதிரி”

“நோ வே.. நீ என்னைப் பின்னாடி பாலோ பண்ணியிருக்க?”

“சரி உன் பாய் பெஸ்ட்டி சுதர்சனைப் பத்தி என்ன நினைக்கிறே?”

“அவன் என் ப்ரெண்ட்”

“நிஜமா ப்ரெண்ட் மட்டும்தானா?”

“ம்ம்ம் ஆமாம் ஏன்?”

“சும்மா கேட்டேன். மாயாஜால் எல்லாம் தனியா ரெண்டு பேர் மட்டும் போயிருக்கீங்களே அதான் கேட்டேன்”

“என் ப்ரெண்டு கூட எங்க வேணா போவேன் உனக்கென்ன?’

“அய்யோ.. எனக்கு ஒண்ணுமில்லை. சும்மா கேட்டேன்.”

“இல்லை ஏதோ ஒண்ணு மனசுல வச்சிட்டுத்தான் கேக்குறே சொல்லு”

“நோ… நத்திங்”

“இல்லை சொல்லு..:”

“உன்கிட்ட சொல்லுறதுக்கு என்ன.. உன்னைப் யாரோ ஒரு ஃபேக் ஐடி, அவன் போஸ்டுல உனக்கும் உன் பாய் பெஸ்டி சுதர்சனுக்கும் ரிலேஷன்ஷிப் இருக்குனு சொல்லிட்டிருக்கான். உனக்குத் தெரியுமா இல்லையானு தெரியலை. அது அனேகமா அந்த கிரிஷாத்தான் இருக்கும். ஸோ .. நான் நேத்து அந்த ஐடி மேல கம்ப்ளெயிண்ட் கொடுத்து பளாக் பண்ண ரெக்வெஸ்ட் கொடுத்துருக்கேன். உன்னை பப்ளிக்கா இப்படி ஹராஸ் பண்றது எனக்குப் பிடிக்கலை.”

“ம்ம்.. தேங்க்ஸ்”

“நாம மீட் பண்ணலாமா?”

“நாட் டூடே..”

“ஏன்?”

“எனக்கு ப்ரெண்ட்ஸ்களோட ஒரு அவுட்டிங் இருக்கு”

“அப்ப நாளைக்கு அல்லது நாளன்னைக்கு? ஐ வாண்ட் டூ”

“ம்ம்ம்.. நாளைக்கு மதியம். நுங்கம்பாக்கம் காஃபி டே… ஓக்கே”

“ஷூயூர்… தேங்ஸ்டா செல்லம். ஹேப்பி வேலண்டைன்ஸ் டே”

…………………………

“தேங்க்ஸ்டா மச்சி சுதா… ஒரு வழியாய் பேசி நாளைக்கு மீட் ஃபிக்ஸ் பண்ணிட்டேன்”

“எந்தக் காரணத்தைக் கொண்டும் நாந்தான் இத்தனைத் தகவல்களையும் கொடுத்தேன்னு அவளுக்குத் தெரிஞ்சிறக்கூடாது. என்ன?”

“நான் சொல்வேனா? என்னோட சேவியர் நீ”

“இல்லை மச்சி… நான் உன் கேர்ள் பெஸ்டிய கரெக்ட் பண்ண ட்ரை பண்ணுறேன். நீ என்னோட கேர்ள் பெஸ்டிய ட்ரை பண்ணுற. மீயூச்சுவலா இதுகூட ஹெல்ப் பண்ணலைன்னா எப்படி? சரி.. முக்கியமா ஒரு விஷயம். அப்பப்ப… எப்பவும் பேசும்போது டியர். செல்லம், புஜ்ஜிக்குட்டின்னு எதையாச்சும் சேர்த்து சொல்லிட்டே இரு.. அது அவளுக்குப் பிடிக்கும்.”

“ஷூயூர்… ஷூயூர்… நீயும் நான் சொன்னத மறக்காத… சட்னு கையை எடுத்து உன் கையில வச்சிட்டு பேச ஆரம்பி.. அவள் அப்படியே மயங்கிறுவா?”

“எது எப்படியோ இவளுங்களை மீறி நாம ஆளுக்கு ஒரு ஆளைப் பிடிக்குறதுங்கிறதுக்கு இதைவிட வேற சதி செய்ய முடியுமானு தெரியலை. ஆல் த பெஸ்ட் மச்சி. ஹேப்பி வேலண்டைன்ஸ் டே”

“ஹேப்பி வேலண்டைன்ஸ் டே”