அயோத்தி வழக்கில் சுமூகமான முறையில் நிரந்தர தீர்வு காண ஓய்வு பெற்ற நீதிபதி இப்ராகிம் கலிஃபுல்லா தலைமையிலான மத்தியஸ்தர்கள் குழுவை நியமித்தது உச்சநீதிமன்றம், மேலும் இக்குழுவின் பேச்சுவார்தைகள் உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் ரகசியமாக நடைபெறும் என்றும் உத்தரவிட்டுள்ளனர் .

அயோத்தி ராமஜென்ம பூமி – பாபர் மசூதி நிலம் சம்பந்தபட்ட வழக்கில் கடந்த 2010 ஆம் ஆண்டு வழக்கு விசாரணைக்கு வந்தது அதன்படி, சர்ச்சைக்குறிய இடமான அந்த 2.77 ஏக்கர் நிலத்தை, ராம்லல்லா, சன்னி வக்ஃப் வாரியம், நீர்மோகி அகாரா ஆகிய மூன்று அமைப்புகளும் பகிர்ந்து கொள்ள வேண்டுமென அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 14 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வின் முன் இன்று விசாரணைக்கு வந்தது.

மத்தியஸ்தர்கள் குழு :

இந்த வழக்கில் நீதிமன்றத்தால் கண்காணிக்கபடும் மத்தியஸ்தர் குழு மூலம் சுமூகமான முறையில் நிரந்தர  தீர்வு காண வேண்டுமென உத்தரவிட்டனர். இதற்காக ஓய்வு பெற்ற முன்னால் நீதிபதி இப்ராகிம் கலிஃபுல்லா தலைமயில் ஒரு மத்தியஸ்தர் குழுவையும் நியமித்தது. அக்குழுவில் வாழும் கலை அமைப்பின் நிறுவனரும் ஆன்மீகவாதியுமான ரவிசங்கர் பிரசாத், சென்னையை சேர்ந்த வழக்கறிஞருமான கிருஷ்ணன் பஞ்சுவும் இடம் பெற்றுள்ளனர்.

மேலும் இந்த மத்தியஸ்தர் குழு உத்தியப்பிரதேச மாநிலம் ஃபைசாபாத்திலிரிந்து செயல்படும் என்றும், 4 வாரத்தில் பணியை ஆரம்பித்து 8 வாரங்களில் முடிக்கவும் உத்தரவிட்டுள்ளது, மேலும் இந்த குழுவின் ஆலோசனைகள், முடிவுகள், நடவடிக்கைகள் எதையும் ஊடகங்களிடம் தெரிவிக்காமல் ரகசியம் காக்க வேண்டுமென்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக வழக்கை நீதிபதிகள் விசாரிக்கும்போது முக்கிய மனுதாரரான இந்து மகாசபா ”பொதுமக்கள் இந்த விஷயத்தில் பேச்சுவார்தை நடத்த விரும்பமாட்டார்கள்” என்றதற்கு, நீதிபதிகள் “ஆரம்பிக்கும் முன்னரே அதுகுறித்து முன்முடிவு எடுக்க கூடாதென்றது, மேலும் ராமஜென்ம பூமி – பாபர் மசூதி விவகாரம் நிலம் சம்பந்தப்பட்டது அல்ல நம்பிக்கை சம்பந்தப்பட்டது எனவும் தெரிவித்தனர்.