மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, பல உள் கட்டமைப்புகளுடன் பல மாநிலங்களை சார்ந்து இயங்குகிறது. மாநிலங்களின் சுயாட்சியிலும் மாநில மக்களின் பாதுகாப்பிலும் இந்த ஜனநாயக தன்மை மோடியின் ஆட்சிக் காலங்களில் நாளுக்குநாள் குறைந்துகொண்டே வருகிறது.

இதை நிரூபிக்கும்வகையில்தான், இங்கிலாந்து நாட்டில் உள்ள கம்ப்ரிடெக் என்ற நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் உலக அளவில், இந்தியா மூன்றாவது கண்காணிப்பு நாடாக விளங்குகிறது என்ற செய்தியை அறிவித்திருக்கிறது. முதல் இரண்டு இடங்களில் ரஷ்யா மற்றும் சீனா நாடுகள் உள்ளன.

அதாவது உலகில் உள்ள நாடுகள் அனைத்திலும் எந்த நாட்டு மக்கள் அதிக அளவு கண்காணிக்கப்படுகின்றன என்ற செய்திக்கு விடையைத்தான் இந்த ஆய்வின் முடிவு நமக்குத் தெரிவிக்கிறது. இந்த ஆய்வில் 2.4/5 என்ற விகிதத்தில்தான் தனிநபர் தகவல்களைப் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு பொறுப்பில் இந்தியா உள்ளது.

குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளில் ஒரு தனிநபரின் தரவுகளை எளிதில் சமூகவலைதளங்களில் காணலாம். தரவுகளை புதுப்பித்தல் மற்றும் தரவுகளை சேகரித்தல் என்று ஒட்டுமொத்த தரவுகளை ஏதாவதொரு வழியில் இந்திய மக்கள் அவர்களுக்கே தெரியாமல் மற்றவர்கள் அறியும் வகையில் அளித்துவருகிறார்கள். இதனடிப்படையில்தான் இந்த ஆய்வின் முடிவு நமக்கு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

ஏன் குறிப்பாக இந்தியா?

இந்திய அரசியலைப்பு சாசனம் இந்தியக் குடிமகன் ஒவ்வொருவருக்கும் அவரவர்களுக்கான உரிமையை வழங்கும் பொருட்டு உத்திரவாதம் அளிக்கிறது. ஆனால் இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள பல மாற்றங்களால் இந்தியர்களின் தனிநபர் உரிமை கேள்விக்குறியாகியுள்ளது.

ஆதார் அட்டை

குறிப்பாக ஆதார் அட்டை மூலம் தனிநபரின் தரவுகளைத் தவறான வழியில் உபயோகிக்க முழுக்க முழுக்க வழிவகை செய்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை

வாட்ஸ்சப்

பல கோடி மக்கள் உபோயோகிக்கும் வாட்ஸ்சப், பேஸ்புக் போன்ற சமூகவலைதளங்களை கண்காணிப்பது என்பது இப்போது சாத்தியமில்லாத ஒன்றே என்கிறது கம்ப்ரிடெக்.

சிசிடிவி

முறையான கட்டமைப்பு வசதிகள் இல்லாத சிசிடிவி அமைப்புதான் இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் உள்ளது என்கிறது கம்ப்ரிடெக் நிறுவனம்.

பல்வேறு வகையில் குறைகளை வைத்துள்ள இந்திய நாடு தற்போது, தனிநபர் தரவுகளை பாதுகாக்கும் அமைப்பை உருவாக்கியிருக்கிறது. அதை எந்தளவிற்கு செயல்படுத்தப்போகிறது என்பதுதான் நம்முன் நிற்கும் கேள்வி.

நன்றி: https://bit.ly/2pppehQ