உலகம் முழுவதும் உள்ள பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்களைக் குறிவைத்து அவர்களின் கைப்பேசிகளை, இஸ்ரேல் நிறுவனம் கண்காணித்ததை whatsapp நிறுவனம் உறுதி செய்துள்ளது.

இந்தியா உட்பட உலகம் முழுவதும் உள்ள பல கோடி மக்கள் பயன்படுத்தும் ஒரு செயலி whatsapp. இன்றைய காலகட்டத்தில் மலிவு விலை அலைபேசியில் கூட whatsapp வசதி வந்துவிட்டது.இந்தியா உட்பட உலகம் முழுவதும் உள்ள பல கோடி மக்கள் பயன்படுத்தும் ஒரு செயலி whatsapp. இன்றைய காலகட்டத்தில் மலிவு விலை அலைபேசியில் கூட whatsapp வசதி வந்துவிட்டது. அந்த அளவுக்கு வாட்ஸ் அப் செயலியின் வளர்ச்சி அதிகரித்துள்ளது. பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும்
இந்தச் செயலியில் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கடந்த மே மாதம் ஒரு தகவல் பரவியது.இந்நிலையில், ஹேக்கர்கள் சிலர் whatsapp செயலி மூலம் ஸ்மார்ட் போன்களில் ஊடுருவுவதாகவும் அதனால் வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்தி வரும் 1.5 பில்லியின் பயனாளர்கள் உடனடியாக அப்டேட் செய்யுறுமாறும் கூறியது வாட்ஸ் அப் நிறுவனம். இஸ்ரேலின் உளவு அமைப்புடன் தொடர்புடையதாகக் கருதப்படும் என்.எஸ்.ஓ. குரூப் என்ற நிறுவனம் ‘பெகாசூஸ்’ (Pegasus) என்ற ஸ்பைவேர் மூலம் whatsapp பயன்படுத்தி உளவு பார்த்திருக்கலாம் என்று அப்போதே கூறப்பட்டது.அப்டேட்டுகள் மூலம் whatsapp-ல் ஏற்பட்ட பிரச்சினை சரிசெய்யப்பட்டது, ஆனாலும் விசாரணைகள் தொடர்ந்து நடந்தன.

இதுதொடர்பான வழக்கு கடந்த வியாழக்கிழமை அமெரிக்காவில் உள்ள கூட்டாட்சி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ. குரூப் நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள 1400 நபர்களை whatsapp மூலம் கண்காணித்ததாக whatsapp நிறுவனம் குற்றம்சாட்டியது. ஆனால், கண்காணிக்கப் பட்ட பயனர்களின் தகவல்களை வெளியிட whatsapp நிறுவனம் மறுத்துவிட்டது. இந்த 1,400 பேரில் பல இந்தியர்களும் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது வாட்ஸ் அப் நிறுவனம். வாட்ஸ் ஆப்பின் சேவை விதிமுறைகளை மீறி என்.எஸ்.ஓ. குரூப் நிறுவனம் மிஸ்டு கால் மூலம் ஸ்மார்ட் போன்களில் ஊடுருவியதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.ஆனால் whatsapp தெரிவித்துள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளது இஸ்ரேலின் என்.எஸ்.ஓ நிறுவனம். தங்கள் கண்டுபிடிப்பான பெகாசூஸ்(Pegasus) என்ற மென்பொருளை முறையாக அரசிடம் விற்றதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. வழக்கு தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில், என்.எஸ்.ஓ. குரூப் நிறுவனத்தின் whatsapp ஊடுருவல் உலகமெங்கும் உள்ள வாட்ஸ்அப் பயனாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் அனைத்து இந்தியர்களின் சுய உரிமைகளையும் காக்கும் பொறுப்பு இந்திய அரசுக்கு உள்ளதாக மத்திய சட்டம் மற்றும் நீதி , மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

மேலும் இவற்றைத் தடுக்க வாட்ஸ் அப் நிறுவனத்திடம் அரசு முறையிட உள்ளதாகத் தெரிவித்தார்.ஃபேஸ்புக் நிறுவனம், டொராண்டோ பல்கலைக்கழகத்தின் சிட்டிசன் லேப் -உடன் இணைந்து இஸ்ரேலிய நிறுவனமான என்.எஸ்.ஓ. குழுமம் தயாரித்த பெகாசஸ் உளவு மென்பொருள் குறித்த விசாரணையில் ஈடுபட்டபோது இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன.

பாதிக்கப்பட்டவர்களின் பெயர்கள் வெளிவரத்தொடங்கியுள்ளன. இதில், சத்தீஸ்கரில் களப்பணியாற்றும் செயல்பாட்டாளர்களும் பீமா கொரேகான் சம்பவத்தில் தொடர்புள்ளதாகக் குற்றச்சாட்டப்பட்ட செயல்பாட்டாளர்களுமே அதிகமாக உள்ளனர்.இந்திய ஊடகங்களிடம் பேசிய சிட்டிசன் லேபை சேர்ந்தவர்கள், பொதுவாக இதுபோன்ற உளவு மென்பொருட்களை அரசாங்கங்கள்தான் வாங்குவது வழக்கம் என தெரிவித்துள்ளனர்.ஆனால், இதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ள அந்த அமைப்பு தயாராக இல்லை. அதுபோல, இந்திய அரசாங்கமும் உளவு பார்த்த குற்றச்சாட்டை மறுத்து வருகிறது.

வரும் நாட்களில் இந்த வழக்கு விசாரணை தீவிரமடையும் போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.