காஷ்மீரில் ஜனநாயகத்தைப் பாதுகாத்திட அரசியல் கட்சித் தலைவர்களை உடனே விடுதலைச் செய்யக்கோரி தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் எம்.பி.க்கள் நாளை டெல்லியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். இந்தியா முழுவதும் உள்ள பெரும்பாலான கட்சிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க தங்களின் ஆதரவினை தெரிவித்துள்ளன.

மு.க.ஸ்டாலின் அழைப்பை ஏற்று இந்த ஆர்ப்பாட்டத்தில் 13 கட்சிகள் பங்கேற்கின்றன. நாளை காலை 11 மணி அளவில் டெல்லி ஜந்தர் மந்தரில் தி.மு.க. சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது. ஆர்ப்பாட்டத்தில் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட அனைத்துக் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கலாம் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

மு.க.ஸ்டாலினின் ஆர்ப்பாட்ட அறிவிப்பினை இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஆதரவுக் கரம் நீட்டி வரவேற்றன. ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. உள்பட 14 கட்சிகளின் எம்.பி.க்கள் பங்கேற்பர் என்று அக்கட்சியின் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். தி.மு.க. நடத்தும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஆம்ஆத்மி, தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, புரட்சிகர சோசலிஸ்ட், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்று பா.ஜனதா அரசிடமிருந்து ஜனநாயகத்தை மீட்டெடுக்கக் கண்டன முழக்கமிடுகின்றனர். காஷ்மீரில் ஜனநாயகத்தைப் பாதுகாத்திட அரசியல் கட்சித் தலைவர்களை உடனே விடுதலைச் செய்யக்கோரி தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் எம்.பி.க்கள் நாளை டெல்லியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.

இந்தியா முழுவதும் உள்ள பெரும்பாலான கட்சிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க தங்களின் ஆதரவினைத் தெரிவித்துள்ளன. மு.க.ஸ்டாலின் அழைப்பை ஏற்று இந்த ஆர்ப்பாட்டத்தில் 13 கட்சிகள் பங்கேற்கின்றன. நாளை காலை 11 மணி அளவில் டெல்லி ஜந்தர் மந்தரில் தி.மு.க. சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது.