காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி தமிழகத்திலும் ஏதாவதொரு தொகுதியில் போட்டியிட வேண்டுமென காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கோரிக்கை வைத்துள்ளார்.

”[ராகுல்காந்தியை உத்திரபிரதேசத்திற்கு மட்டும் கருதமுடியாது அமைதி தொகுதியைப் போல தமிழகத்திலும் அவர் ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டு”மென கே.எஸ்.அழகிரி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பாக கோரிக்கை வைத்துள்ளார். அதற்கு மதசார்பற்ற கூட்டணி ஆதரவளிக்குமென நம்புவதாக அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே ராகுல்காந்திதான் அடுத்த பிரதமர் என தமிழகத்திலிருந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்திருக்கும்நிலையிலும், மோடிக்கெதிரான எதிர்ப்பு அலை தமிழ்நாட்டில் கடுமையாக வீசுவதாலும், சமீபத்தில்  ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் மாணவிகளிடையே ராகுல்காந்தி ஆற்றிய உரை பெரும் வரவேற்பை இளைஞர்களிடம் பெற்று தமிழகத்தில் ராகுல் காந்தியின் இமேஜ் பெருமளவு உயர்ந்திருப்பதாலும் ராகுல்காந்தி போட்டியிடுவதற்கு தமிழகம் மிகவும் பொருத்தமான இடமாக இருக்கும் என்ற அடிப்படையில் கே.எஸ்.அழகிரி இந்தக் கருத்தை தெரிவித்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.