மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது இரு பிரிவுகளின்கீழ் மாம்பலம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 18ஆம் தேதி சென்னை தியாகராய நகரில் மே 17 இயக்கம் சார்பில் தமிழ் ஈழ மக்களுக்கான 10ஆம் ஆண்டு வீர வணக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், அன்று நடைபெற்ற கூட்டத்தில் திருமுருகன் காந்தி பிரதமரையும், மத்திய அரசையும் விமர்சித்து விதிமுறைகளை மீறி பேசியதாகச் சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் திருமுருகன் காந்தி மீது இரு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.