நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி மே 19ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்நிலையில், இதற்காக வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றுவருகிறது.

பாஜக 300க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன. காங்கிரஸ் 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன. பாஜக பெரும்பான்மை தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது.

தமிழகம் மற்றும் புதுவையில் மக்களவை தேர்தலில் திமுக 33 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. 3 தொகுதிகளில் அதிமுக முன்னிலையில் உள்ளது. தமிகத்தில் 22 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலிலும் திமுக முன்னிலையில் உள்ளது. திமுக 10 தொகுதிகளிலும், அதிமுக 6 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.

பெரம்பலூர், காஞ்சிபுரம், நாமக்கல், ஸ்ரீபெரும்புதூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கள்ளக்குறிச்சி, திருச்சி, அரக்கோணம் ஆகிய தொகுதிகளில் திமுக முன்னிலையில் உள்ளன.

மத்தியப் பிரதேசம் மொத்த தொகுதிகள்- 29 முன்னிலை நிலவரம்

பாஜக கூட்டணி- 27 இடங்கள்

காங்கிரஸ் கூட்டணி- 01

மற்றவை-0

உத்தரப்பிரதேச மொத்த தொகுதிகள்-80 முன்னிலை நிலவரம்

பாஜக கூட்டணி- 29 இடங்கள்

பகுஜன் சமாஜ் கூட்டணி- 10 இடங்கள்

காங்கிரஸ்- 3