தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

சென்னை வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு இன்று (ஆகஸ்ட் 10) வருகை தந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அங்கு பிறந்த புலிக்குட்டிகளுக்கும் சிங்கக்குட்டிகளுக்கும் பெயர் சூட்டினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், “விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும். உள்ளாட்சி தேர்தலில் அதிமுக பெரும்பான்மையான இடங்களில் போட்டியிடும்” என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், “வேலூர் மக்களவை தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றதாகவே கருதுகிறோம். வேலூர் மக்களவை தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக கணிசமான வாக்குகளை பெற்றுள்ளது.” என்று கூறினார்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த அக்டோபர் 31ஆம் தேதிவரை அவகாசம் கேட்டு மாநில தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.