சீனாவில் தனது காதலனின் திருமணத்திற்குத் திருமண ஆடையுடன் சென்ற முன்னால் காதலி, இன்னொரு பெண்ணுடன் மேடையில் நின்றுகொண்டிருந்த தன்னுடைய காதலனைக் கைபிடித்து இழுத்து ‘என்னுடன் வந்துவிடு. இது என்னுடைய தவறுதான்’ என்று கெஞ்சும் விடியோ காட்சி சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

‘டெய்லி மெய்ல்’ பத்திரிகையின் அறிக்கைப்படி, திருமண உடையுடன் வந்த இன்னொரு பெண், தன் காதலனைக் கண்டு சத்தமிட்டு வெடித்து அழுதார். இதைக் கண்டு திருமணத்திற்கு வந்த அனைவரும் குழப்பமடைந்தனர். சிலர் காதலின் உண்மைத்தன்மை இதுதான் என்று கலைந்து சென்றனர்.

இதனால் கோபமுற்ற மணப்பெண் அங்கிருந்து ஆவேசமாக மணமகனின் கையை உதறிவிட்டுச் செல்லும் காட்சி காணொளியில் பதிவாகியுள்ளது.