திர்ச்சியளிக்கும் ஒரு அறிக்கையை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) வெளியிட்டுள்ளது. அது ஆளும் பாஜகவில்தான் பெண்களுக்கெதிரான மிக அதிக குற்றம் செய்தவர்கள் எம்‌.எல்‌.ஏ. மற்றும் எம்‌.பி.க்களாக இருக்கிறார்கள் என்பதுதான் அது.

மற்றக் காட்சிகளை ஒப்பிடும்போது பாஜகதான் குற்றம் செய்தவர்களுக்குத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை அதிகம் வழங்கியிருக்கிறது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் (BSP) மம்தா பானர்ஜியின் அகில இந்தியா திரிணாமுல் காங்கிரசும் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டோருக்கு வாய்ப்பு வழங்கியிருக்கிறது.

(ADR) ஆய்வுசெய்ததில் இந்தியாவிலுள்ள மொத்தம் 4,896 எம்‌.பி-க்கள் எம்‌.எல்‌.ஏ-க்களில் 4,845 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. அதில் 776 எம்‌.பி-க்களில் 768 பேரின் மீதும் 4,120 எம்‌.எல்‌.ஏ-க்களில் 4,077 பேர் மீதும் அடங்கும்.

இந்த ஆய்வில் குற்றம் செய்யப்பட்டவர்கள் என தீர்ப்பளிக்கப்பட்டவர்கள் 1,580 (33 சதவீதம்) எம்‌எல்‌ஏ/எம்‌பி-க்கள் ஆவார். இதில் 48 பேர் பெண்களுக்கெதிரான குற்றங்களைச் செய்தவர்கள்.

இதில் பாஜகவில்தான் அதிகம் பேர் மொத்தம் 12.

அதைத்தொடர்ந்து சிவசேனா 12, திரிணாமுல் காங்கிரஸ் 6.  இந்த 48 பேரில் 45 பேர் எம்‌.எல்‌.ஏ. 3 பேர் எம்.பி.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த எம்‌.எல்‌.ஏ/எம்‌.பி-க்கள்தான் பெண்களுக்கெதிரான அதிக குற்றங்களைச் செய்தவர்கள் (12 பேர்). இரண்டாவது மூன்றாவது இடங்களில் மேற்கு வங்காளம் (11) ஆந்திரா (5)  இருக்கிறது.

இதேபோல நிலுவையிலுள்ள பெண்களுக்கெதிரான குற்றங்களைச் செய்தவர்களில் 327 பேருக்குத் தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பை நாட்டின் பல பெரிய கட்சிகள் வழங்கியுள்ளன.

அதில் பாஜகவே முன்னணியில் உள்ளது. கடந்த 5 வருடங்களில் பெண்களுக்கெதிரான குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்ட 47 பேருக்கு அந்த கட்சி இடம் கொடுத்துள்ளது.

பல கொடூரமான குற்றங்களைச் செய்தவர்கள்கூட போட்டியிட விருப்பமான தேர்வுகளாக இருந்திருக்கிறார்கள். கடந்த 5 வருடங்களில் பாலியல் வழக்கில் தண்டிக்கப்பட்ட 26 பேருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

ADR தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அனில்வர்மா இந்தியா டுடே பத்திரிக்கையிடம், “எல்லாக் கட்சிகளுக்கும் வெற்றிபெற யாருக்கு வாய்ப்பு உள்ளது என்ற நோக்கம் மட்டுமே உள்ளது. அவர்களின் குற்றப் பின்னணியைப் பற்றி அவர்களுக்குச் சிறிதும் அக்கறை இல்லை. இதில் என்னை அதிகம் ஆச்சரியப்படுத்துவது பெண்கள் தலைவர்களாக உள்ள கட்சியில்கூட பெண்களுக்கெதிரான குற்றங்களைச் செய்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதுதான்.” எனக் கூறினார்.

எந்த நம்பிக்கையில் இந்தக் கட்சிகளும் அந்தக் கொடூர குற்றங்களைச் செய்தவர்களும் சிறிதும் கூச்சமில்லாமல் நம்மிடையே வாக்குகேட்டு வருகிறார்கள் என்றால், அது நம் மறதி, சமூக அலட்சியம், நம் சுயநலம் அதை நம்பியே. இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் சட்டத்தின் துணையோடு அதிகாரமாகவே குற்றங்களைச் செய்வார்கள். அவர்களை நாம் பழியே சொல்லமுடியாது அவர்கள் தங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டாம் என்றுதான் நமக்கு வாய்ப்பளிக்கின்றனர். ஆனால் அப்படியும் அவர்களைத் தேர்ந்தெடுப்பதின்மூலம் அவர்களுக்கு ஒரு பெரும் நம்பிக்கையையும் தைரியத்தையும் தருகிறோம். நீங்கள் எந்த ஒரு கொடூரமான குற்றம் செய்தாலும் எங்களுக்குக் கவலையில்லை என்பதுதான் அது.