தனது மகளின் வீடுப்பாடத்தை கவனிக்க வீட்டில் உள்ள செல்லபிராணிக்கு தந்தை ஒருவர் பயிற்சியளித்துள்ள சம்பவம் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைராலாகி வருகிறது.

நாட்டில் உள்ள பெரும்பாலான மக்களுக்குச் செல்லப்பிராணிகள் மிகவும் பிடிக்கும். இதில், முதலிடத்தில் இருப்பது நாய். நன்றியுள்ள விலங்கு என்றும் காவல்காரன் என்றும் அனைவராலும் பாராட்டப்படும் செல்லப்பிராணி நாய். நாம் வளர்க்கும் செல்லப்பிராணிக்கு விளையாட்டு உட்பட பல விஷயங்களைச் சொல்லிக் கொடுப்பது வழக்கம். அதை செல்லப்பிராணியும் பின்பற்றி நடக்கும். இந்நிலையில், ஒருவர் தனது செல்லப்பிராணியான நாயை தனது மகள் வீட்டுப்பாடம் செய்வதை கண்காணிக்க பயிற்சி செய்துள்ள நிகழ்வு அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

பொதுவாகக் குழந்தைகள் செல்லப்பிராணிகளுடன் விளையாடுவதைத்தான் நாம் அனைவரும் பார்த்திருப்போம். ஆனால் இந்த செல்லபிராணி நாய் பள்ளியிலிருந்து வீடு திரும்பிய குழந்தை செய்யும் வீட்டுப்பாடத்தை கண்காணிப்பது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் இருக்கும் ஒரு தந்தைக்கு தனது வீட்டுப்பணிகளைச் செய்துகொண்டு, தனது குழந்தையைக் கவனிக்கும் வேலையும் இருந்துள்ளது. அதனால், வீட்டுப்பணிகளைச் செய்துகொண்டிருக்கும்போது, தனது குழந்தையின் வீட்டுப்பாடத்தைக் கவனிக்கத் தனது நாய்க்குப் பயிற்சியளித்துள்ளார் அந்த தந்தை.

இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைராலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு குழந்தை தனது வீட்டுப்பாடங்களைச் செய்யும்போது, செல்லப்பிராணியான நாய் முன்னால் உள்ள மேசையில் தனது கைகளை வைத்தபடி வீட்டுப்பாடத்தை கவனிக்கும் அந்தக் காட்சி இடம்பெற்றிருக்கும். தனது மகள் அவளது வீட்டுப்பாடத்தை முடிக்காமல் ஸ்மார்ட்போனில் விளையாடுவதைக் கண்ட இந்த தந்தை, மகளை கண்காணிக்க தனது செல்லபிரானிக்கு பயிற்றுவித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள பெரும்பாலான பெற்றோருக்கு, குழந்தைகளின் வீட்டுப்பாடங்களை நேரத்திற்குள் முடிக்கவைப்பது பெரும் தொந்தரவாக இருக்கும்போது, இந்த விடியோ அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.