தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் சார்பில் நடத்தப்படும் குரூப்-4 தேர்வு, வரும் செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும், குரூப்-4 தேர்வு பற்றிய அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. வரும் ஜூன் 14 ஆம் தேதி முதல் இத்தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து, ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆன்லைனில் விண்ணப்பங்களை சமர்பிக்க ஜூலை 14ஆம் தேதி இறுதி நாளாகும்.

பணிகள்:

விஏஓ (VAO)

ஜீனியர் அசிஸ்டெண்ட்(Junior Assistant)

பில் கலெக்டர்(Bill Collector)

தட்டச்சர்(Typist)

உள்ளிட்ட பணிகளுக்கு 1.09.2019. நாள் தேர்வு நடைபெறும்.

மேலும் கல்வித்தகுதி, வயது வரம்பு, தேர்வு முறை, இட ஒதுக்கீடு, தேர்வுக்கட்டணம், காலிப்பணியிடங்கள் குறித்த விவரங்கள் அரசுப்பணியாளர் தேர்வாணைய இணையதள பக்கத்தில் ஜூன் 14ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களை http://www.tnpsc.gov.in/ என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.