ஸ்ரீவில்லிபுத்துார், ஆண்டாள் கோயிலில் ஆடி மாதத்தில் தேரோட்டம், பங்குனி மாதத்தில் ஆண்டாள் திருக்கல்யாணம் உட்பட பல்வேறு வைபவங்களையொட்டி கோயில் வாசலிலிருந்து  உட்பிரகாரங்கள்வரை பெயின்டால் கோலங்கள் வரையப்பட்டு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்படும். தினமும் காலையில் ஆண்டாள், ரெங்கமன்னார் மண்டபம்முன் எழுந்தருளி, இரவு வீதிஉலா நடந்துவருகிறது. இதற்காகக் கோயில் வாசலிலிருந்து கொடிமரம் வரை  புதிதாக பல வண்ணங்களில் கோலங்கள் வரையப்பட்டன.

ஆண்டாளின் விருப்பப் பூவாக கருதப்படும் தாமரைப் பூக்கள், அக்கோலங்களில் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில் தேர்தல் நடக்கவிருப்பதால், பா.ஜ.க,வின் சின்னம் தாமரையாக இருப்பதாலும் கோலங்களில் இடம்பெற்ற தாமரைப் பூக்களை, ஸ்ரீவில்லிபுத்தூர், டி.எஸ்.பி., ப.ராஜா அதிரடி உத்தரவுப்படி சுண்ணாம்பு பூசி அழிக்கபட்டன.

இதனால் ஆண்டாள் பக்தர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. டி.எஸ்.பி., ப.ராஜாவின் இச்செயல், ஹிந்து அமைப்பினரிடம் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.