தடையைமீறி டெல்லியில் துப்பாக்கியுடன் சல்மான் என்ற மாணவர் டிக்-டாக் வீடியோ பதிவுசெய்ய முயன்ற பொழுது எதிர்பாராத விதமாக குண்டு பாய்ந்ததால் உயிரிழந்துள்ளார்.

டெல்லி ஜப்ராபாத்தை சேர்ந்த கல்லூரி மாணவரான சல்மான் தனது நண்பர்களுடன் இணைந்து இந்தியாகேட் சென்றுள்ளனர். அங்கு காரின் ஓட்டுநா், இருக்கையில் அமா்ந்தவாறு சல்மானின் கண்ணத்தில் நாட்டு துப்பாக்கியை வைத்துள்ளார். மற்றொரு நண்பரான சோஹைல் வீடியோ எடுத்துள்ளார். அப்பொழுது திடீரென துப்பாக்கியில் இருந்து குண்டு சல்மானின் கழுத்து பகுதியில் பாய்ந்ததால்  சல்மான் சுருண்டு விழுந்துள்ளார். இதனைத் தொடா்ந்து அங்கிருந்த நண்பா்கள் தப்பி ஓடியுள்ளனா்.

இதனையடுத்து சல்மானை மருத்துவமனைக்கு கொண்டுச் சென்ற பொழுது அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது தொடா்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினா் தப்பி ஓடியவா்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.