நார்வே நாட்டை சேர்ந்த 24 வயதான பீயர்கீட்ட கலெஸ்டட், தனது நண்பர்களுடன் கடந்த பிப்ரவரி மாதம் சுற்றுலா சென்றிருந்தார். பீயர்கீட்டக்கு விலங்குகள் என்றால் மிகவும் பிடிக்கும். சுற்றுலாவில் தெருநாய்க்குட்டி ஒன்றினை கண்டெடுத்து வளர்த்தார்.

அந்த நாய்க்குட்டியை தன்னுடைய இடத்திற்கு கொண்டு சென்றபோது, அது கடித்ததில் பீயர்கீட்டுக்கு நோய்க்கிருமி தொற்று ஏற்பட்டது.

நாய்க்குட்டியுடன் பீயர்கீட்ட கலெஸ்டட் விளையாடியபோது  லேசான நகக்கீறலால் காயம் ஏற்பட்டது, அக்காயத்திற்கு அப்போது ஊசி போட்டுக் கொண்ட பீயர்கீட்ட, மேலும் இதற்காக வேறு எந்த சிகிச்சையும் எடுத்துக்கொள்ளவில்லை.

மீண்டும் நார்வே நாட்டிற்கு திரும்பிய சில நாட்களிலேயே அவரது உடல்நிலை மோசமானது. கடந்த மே 6ஆம் தேதி அவர் வேலைப் பார்த்து வந்த மருத்துவமனையிலேயே பீயர்கீட்ட உயிரிழந்தார்.

மருத்துவர்கள் பீயர்கிட்டவுக்கு ரேபிஸ் நோய் தொற்று ஏற்பட்டு மூளை மற்றும் நரம்பு மண்டலம் கடுமையாக பாதிக்கப்பட்டு உயிரழந்தார் என தெரிவித்தனர்.

மேலும் இதுபற்றி அவரது பெற்றோர் கூறுகையில் “இதுபோன்ற ஒரு சம்பவம் வேறு யாருக்கும் நிகழக்கூடாது. விலங்குகள் மீது அன்பு செலுத்தி என் பெண் தற்போது உயிரழந்திருக்கிறார்” என்று தெரிவித்தனர்.