புதுக்கோட்டை அருகே உள்ள அரசுப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள், போதைப்பொருட்கள் பயன்படுத்துவதாகக் கூறி பள்ளிக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

புதுக்கோட்டை அருகில் உள்ள ராஜகோபாலப்புரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதாக ரகசியத் தகவல் பெற்ற ராஜகோபாலப்புரம் காவல்துறையினர்,நேற்று திடிரென்று பள்ளிக்குள் புகுந்து சோதனை நடத்தினர். மேலும் போதைப்பொரிட்கள் பயன்படுத்தியதாக சில மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். மாணவர்கள் போதைப்பொருட்களை பயன்படுத்த  அப்பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் தான் காரணம் என குற்றஞ்சாட்டப்பட்டு அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியது. இதனையடுத்து அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

இந்நிலையில் மாணவர்கள் மீது தாக்குதலில் ஈடுப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து பள்ளி வளாகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அம்மாணவர்களுக்கு ஆதரவாக பெற்றோர்களும் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுப்பட்டு தங்கள் பிள்ளைகளை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இதனையடுத்து தகவல் அறிந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வனஜா, போராட்டம் நடந்த இடத்திற்கு விரைந்தார். மேலும் இதுகுறித்து போராட்டத்தில் ஈடுப்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் விசாரணை மேற்கொண்டு மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு உரிய விசாரணைக்குப் பின் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். முதன்மை கல்வி அலுவலர் அளித்த வாக்குறுதியை அடுத்து போரட்டத்தில் ஈடுப்பட்டோர் கலைந்துச் சென்றனர்.