யுனிசெஃப்-ன் நல்லெண்ணத்தூதரக இருந்து வரும் பிரியங்கா சோப்ரா விமானப்படை தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்ததால் ஒரு தலை பட்சமாக நடந்துக் கொள்கிறார் என்று கூறி பதவியை விட்டு விலகுமாறு பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது.

2016 ஆம் ஆண்டு முதல் பிரியங்கா சோப்ரா, யுனிசெஃப்-ன் நல்லெண்ணத் தூதராக இருந்து வருகிறார். இவர் புல்வாமா தாக்குதலுக்கு எதிராக இந்திய விமானப்படை பதிலடி கொடுத்ததற்கு ஆதரவாக தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார். இவர் தனது டிவிட்டர் பக்கத்தில் jai hind#indianArmedForces என்று தெவிரித்தார்.

 யுனிசெஃப்ன் நல்லெண்ணத் தூதராக இருந்துக் கொண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையேயான தாக்குதலில் நடுநிலையாக செயல்படாமல் ஒருதலை பட்சமாக அவர் நடந்து கொண்டது கண்டிக்கத்தக்கது எனவும் மேலும் அவர் தூதர் பதவியிலிருந்து விலக வேண்டும் எனவும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் பிரியங்கா சோப்ராவுக்கு எதிராக ஆன்லைனில் கையெழுத்து போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

இதற்கு முன்னர் இந்திய கிரிக்கெட் வீரர்களும் திரைப்படக் கலைஞர்களும் இந்திய நட்சத்திரங்களும் இந்தியாவுக்கு ஆதவராக கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.