பிரிட்டனை சேர்ந்த நகைச்சுவை நடிகர் இயான் காக்னிடோ என்பவர் மேடையில் நடித்து கொண்டிருந்தப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் உயிரிழந்தார்.

பிரிட்டனில் ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்ட ஸ்டாண்ட் அப் நகைச்சுவை நடிகர் இயான் காக்னிடோ(60). இவர் நேற்று(ஏப்ரல்,12) நிகழச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால்  நாற்காலியில் விழுந்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் வழக்கம்போல் ஏதோ நகைச்சுவை செய்கிறார் என நினைத்தனர். ஆனால் சற்று நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார். சிறிது நேரம் கழித்து அவருக்கு ஏதோ பிரச்சனை என உணர்ந்த பார்வையாளர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், ஏறக்னவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.