சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது சில விஷயங்கள் ட்ரெண்டாகி கொண்டே இருக்கும் இந்நிலையில் பிரபலங்களின் புகைப்படங்களுடன் ஒப்பிடப்பட்ட உணவுப் பொருகளின் புகைப்படங்கள் பதிவுகள் தற்போது வைரலாகி வருகின்றது.

கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி அன்று டிவிட்டரில் அமெரிக்க பாப் பாடகி மரியா கரே (Mariah Carey) வின் ஆடையுடன் முட்டைக்கடைய பயன்படுத்தப்படும் பொருளுடன் ஒப்பிட்டுப் புகைப்படம் ஒன்று பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து பல பிரபலங்களின் பிகைப்படங்களும் வித்தியாசமான பொருட்களுடன் ஒப்பிடப்பட்டு பதிவுசெய்யப்பட்டு வருகின்றது.

இந்தியாவில் ஹிந்தி இசையமைப்பாளர் பாப்பி லஹிரி அவர்கள் பல வண்ணங்கள் நிறைந்த துப்பட்டா அணிந்த புகைப்படம் இனிப்புடன் ஒப்பிடப்பட்டுள்ளது.

இவரை அடுத்து சுந்தர்.சி-யின் நகரம் மறுப்பக்கம் திரைப்பட்த்தில் இடம்பெற்ற வைகை புயல் வடிவேலுவின் நகைச்சுவை புகைப்படத்துடன் குச்சி ஐஸை ஒப்பிட்டுப் பதிவு செய்துள்ளனர்.
ஹிந்தி நடிகை தீபிகா படுகோனேவின் புகைப்படத்துடன் கப்கேக்கை ஒப்பிட்டு #8yearsofDeepika என்ற ஹாஷ்டேக் உடன் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது போன்று உலக பிரபலங்கள் அனைவரின் புகைப்படத்தை ஒப்பிட்டு வருகின்றன. அதில் சில பின்வருமாறு: