அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசாரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்கு திரைப் பிரபலங்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
 
“மகாத்மா காந்தியை கொன்ற நாதுராம் கோட்சே என்ற இந்துதான் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி” என அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசாரத்தில் கமல்ஹாசன் கூறியிருந்தார்.
 
அவரின் இந்த கருத்தில் இந்து என குறிப்பிட்டு சொன்னதற்கு பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், நடிகை கஸ்தூரி, நடிகை காயத்திரி ரகுராம் உள்ளிட்டவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.