தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம்வந்த விவேக் அண்மை காலமாக குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் நடித்திருக்கும் ‘வெள்ளை பூக்கள்’ திரைப்படம் தனித்துவமான கதாபாத்திரம் ஒன்றை வழங்கியிருக்கிறது.

ஆக்க்ஷன் த்ரில்லர் வகை படமாக உருவாகியிருக்கும் இப்படத்தில் முதிர்ச்சியும், நவீன தோற்றமும் கொண்ட மனிதராக விவேக் நடித்திருக்கிறார். சென்னையிலும் அமெரிக்காவிலும் நடைபெறும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் கதையில் விவேக்குக்கு வலுவான கதாபாத்திரம் கிடைத்திருக்கிறது என்றே சொல்லலாம்.

இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் பல்வேறு முக்கிய நட்சத்திரங்கள் பங்கேற்றனர். அப்போது ‘வெள்ளை பூக்கள்’ திரைப்படத்தின் கதைக்கரு வெளியிடப்பட்டது. கதைக்கரு உருவாக்கியிருக்கிற பிம்பம் விவேக்கின் கதாபாத்திரம் குறித்த ஒரு நேர்மறையான கண்ணோட்டத்தை ரசிகர்களுக்கு வழங்கியிருக்கிறது.