அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள சிந்துபாத் திரைப்படம் வரும் மே 16-ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக அருண்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள சிந்துபாத் படத்தில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி.

அஞ்சலி முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கே புரொடக்ஷன்ஸ் இதனைத் தயாரித்துள்ளது.

இந்நிலையில் நேற்று ட்வீட் செய்த விஜய் சேதுபதி, “அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்” சிந்துபாத் மே 16-ஆம் தேதி வெளியாகுமென அறிவித்துள்ளார்.