பாலியல் புகார் வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக, மீ டூ இயக்கம் சார்பாக சென்னையில் போராட்டம் நடத்த பாடகி சின்மயி அனுமதி கோரியிருந்தார்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மே 12-ஆம் தேதி மாலை 3.30 மணியளவில் போராட்டம் நடத்த சின்மயி அனுமதி கேட்ட நிலையில், காவல்துறை அவருக்கு அனுமதி மறுத்துள்ளது.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக பெண் செயற்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினர். அந்த வகையில் மீ டூ இயக்கத்தில் போராட்டம் நடத்த சின்மயி அனுமதி கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.