கனா படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகும் நெஞ்சம் உண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

முன்னணி நடிகராக வலம்வரும் சிவகார்த்திகேயன் தனது நண்பர் அருண்ராஜா காமராஜ் இயக்கிய கனா படத்தைத் தயாரித்தார். இப்படம் பெரும் வெற்றியடைந்தது.

இதனைத் தொடர்ந்து அவர் தயாரிக்கும் நெஞ்சம் உண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா திரைப்படத்தைக் கார்த்திக் வேணுகோபால் இயக்குகிறார்.

ரியோ ராஜ், காஞ்ச்வாலா ஸ்ரீரின், விக்னேஷ்காந்த் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடிக்கின்றனர். இப்போது இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுச் சில தகவல்களையும் அறிவித்துள்ளனர்.