விஜய் ரசிகர்களுக்கு அவரது படங்கள் ரீலிசை போலவே அவரது பிறந்தநாளும் ஒரு திருவிழாதான். விஜய் தற்போது நடிக்கும் படங்கள் குறித்த அப்டேட்கள் மற்றும் விஜய் ரசிகர்களுடன் சந்திப்பு போன்ற எண்ணற்ற செய்திகள் அவரது பிறந்தநாளின் போதுதான் வெளிவரும்,
இந்நிலையில் நேற்று அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இது விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்தது.

முக்கியமாக டுவிட்டரில் அவரது பிறந்த நாளுக்கான கொண்டாட்டம் தீவிரமாக கொண்டாடப்பட்டு வருகிறது. #happybirthdayTHALAPATHY என்ற ஹேஷ்டேக் தற்போது தேசிய அளவில் டிரெண்டாகியுள்ளது.

இதையடுத்து டுவிட்டரில் நடக்கும் விஷயங்கள் குறித்து வெளியிடும் டுவிட்டர் மொமெண்ட்ஸ் இந்தியா அவரது பிறந்தநாள் குறித்து மொமெண்ட் ஒன்றை உருவாக்கியுள்ளது.

அதில் அவர்கள் ‘பாக்ஸ் ஆபீஸ் ஸ்டார்’ என விஜயை குறிப்பிட்டுள்ளனர். இது ரசிகர்களை மேலும் குஷியாக்கியுள்ளது. இதை குறிப்பிட்டு பலர் டுவிட் செய்து வருகின்றனர்.