இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கதையில் உருவாகும் புதிய படத்தில் நடிகை திரிஷா ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.

எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி ஆகிய படங்களை இயக்கிய எம்.சரவணன் இப்படத்தினை இயக்குகிறார். லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

முழுக்க முழுக்க கதாநாயகியை மையப்படுத்தி உருவாகும் இப்படத்திற்கு ‘ராங்கி’ என பெயரிட்டுள்ளனர்.  சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.  மான் கரத்தே படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் கதையில் உருவாகும் இரண்டாவது திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.