பாபு யோகேஷ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் தயாராகிக் கொண்டிருக்கும் ”தமிழரசன்” படத்தில் 9 ஆண்டுகள் கழித்து இளையராஜா இசையில் யேசுதாஸ் ஒரு பாடலை பாடியுள்ளார்.

விஜய் ஆண்டனி நடிப்பில் தயாராகிக்கொண்டிருக்கும் படம், `தமிழரசன்’. `தாஸ்’ படத்தை இயக்கிய பாபு யோகேஷ்வரன் இப்படத்தை இயக்குகிறார். விஜய் ஆண்டனியின் நீண்ட நாள் கனவான இளையராஜா இசையமைப்பில் நடிப்பது இப்படம் மூலம் நிறைவேறியது.

மேலும் இப்படத்தில் இளையராஜா இசையில் “பொறுத்தது போதும் பொங்கிட வேணும் புயலென வா“ என்ற புரட்சிகரமான பாடலை யேசுதாஸ் பாடியுள்ளார்.  `நந்தலாலா’ படத்துக்கு பிறகு 9 ஆண்டுகள் கழித்து இளையராஜா இசையில் இவர் பாடுவது குறிப்பிடத்தக்கது.`கத்தி’ படத்தில் யேசுதாஸ் பாடிய `யார் பெற்ற மகனோ’ பாடலுக்குப் பிறகு இப்பாடல் பேசும்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. `தமிழரசன்’ படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.