டிகர், கதையாசிரியர், தயாரிப்பாளர் என திரைத்துறையில் தனது பன்முகத் திறனை வெளிப்படுத்தி வரும் விஜய் சேதுபதி அடுத்ததாக மற்றொரு புதிய அவதாரம் எடுத்திருக்கிறார்.

விக்ராந்த் அவரது சகோதரர் சஞ்சீவ் இயக்கத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்துக்கு விஜய் சேதுபதி திரைக்கதை எழுதுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னணி நடிகராக வலம்வரும் விஜய் சேதுபதி, ‘ஆரஞ்சு மிட்டாய்’ திரைப்படத்தின் கதையமைப்பில் பங்களிப்பு செலுத்தினார். மேலும், கடந்த ஆண்டின் மிகச்சிறந்த திரைப்படமாக பார்க்கப்படும் ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ விஜய் சேதுபதியின் தயாரிப்பில் வெளியானதாகும்.

தற்போது திரைக்கதையையும் கையில் எடுத்திருக்கும் விஜய் சேதுபதியின் ஆற்றல் வியப்பை ஏற்படுத்துகிறது. சஞ்சீவ் இயக்கும் இப்படம் கிக் பாக்ஸிங்கை மையப்படுத்தி உருவாக்கப்படுகிறது. விக்ராந்த் உடன் விஷ்ணு விஷால் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.