‘தடம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிரபாஸுடன் ‘சாஹோ’, ‘அக்னி சிறகுகள்’, மற்றும் ‘பாக்ஸர்’ உள்ளிட்ட படங்களில் அருண் விஜய் நடிக்கிறார்.
அவ்வப்போது வெளியாகும் அருண் விஜயின் உடற்பயிற்சிப் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. இதனை அவர் ட்விட்டரில் வெளியிடுவது வழக்கம்.
இப்போது அருண் விஜய் ட்விட்டரில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் மற்றும் தகவல் ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியிருக்கிறது.
‘பாக்ஸர்’ திரைப்படத்துக்கு வியட்னாம் சென்று தற்காப்பு கலைகளை அருண் விஜய் கற்று வருகிறார். இதனை அவரே ட்விட்டரில் கூறியுள்ளார்.