விஷால் நடிப்பில் ‘அயோக்யா’ இன்று வெளியான நிலையில், அவரது அடுத்த படங்கள் குறித்து சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் விஷால் நடிப்பில் வந்த இரண்டு வெற்றி படங்கள் துப்பறிவாளன் மற்றும் இரும்புத்திரை. விஷால் ஏற்கனவே இரும்புத்திரை 2 படத்தின் பணிகளை தொடங்கிவிட்டார். இதனை அறிமுக இயக்குநர் ஆனந்த் இயக்குகிறார்.
அடுத்து மிஷ்கின் இயக்கத்தில் வந்த துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்தையும் உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், வருகின்ற ஆகஸ்ட் மாதம் மிஷ்கின் இயக்கத்தில் துப்பறிவாளன் 2 படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.