விமல் நடிப்பில் 2010ஆம் ஆண்டு வெளியான களவாணி பாகம் ஒன்று, தமிழ் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்ப்பை பெற்ற நிலையில் களவாணி 2 பாகம் எடுக்கப்போவதாகப் படத்தின் இயக்குநர் சற்குணம் தெரிவித்திருந்தார்.

இன்று (ஏப்ரல் 14) களவாணி 2 படத்தின் ட்ரைலர் வெளியாகிச் சமூக வலைதளங்களில் பரவலாகக் கவனம் பெற்றுவருகிறது. இப்படத்தின் டீசரை நடிகர் அருண் விஜய் ட்விட்டரில் வெளியிட்டார்.

அதே நகைச்சுவை கதாபாத்திரத்தில் ஓவியாவுடன் இணைந்துள்ளார் விமல். தனது நடிப்பு திறமையை களவாணியின் மூலம் வெளிப்படுத்திய விமலுக்கு களவாணி 2 திரைப்படம் பல படவாய்ப்புகளை பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையில் உள்ளார்.

மேலும் படத்தில் சரண்யா, இளவரசு ஆர்.ஜே.விக்னேஷ் மற்றும் கஞ்சா கருப்பு நடித்துள்ளனர்.
படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்க வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.