‘விஜய் 63’ திரைப்படத்தின் டூயட் பாடல் ஒன்றை படமாக்க கலை இயக்குநர் தி. முத்துராஜ் பிரம்மாண்ட செட் அமைத்திருக்கிறார். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள பாடலில் விஜய் – நயன்தாரா தோன்றுகின்றனர்.
இந்த ஜோடி கடைசியாக 10 ஆண்டுகளுக்கு முன்னர் ‘வில்லு’ படத்தின் பாடலுக்காக இணைந்திருந்தது. இப்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தின் டூயட் பாடலில் விஜய் – நயன்தாரா இணைந்துள்ளனர்.
படத்தின் முக்கியமான பாடல் காட்சியான இதன் படப்பிடிப்பு இன்றும் நாளையும் நடைபெறுகிறது. கோகுலம் ஸ்டுடியோஸில் அமைக்கப்பட்டுள்ள இதற்கான செட் படக்குழுவினரின் மெனக்கெடலில் உருவாகியிருக்கிறது. அட்லீ இயக்கும் ‘விஜய் 63’ திரைப்படத்தில் கதிர், ஜேக்கி ஷரஃப், டேனியல் பாலாஜி, இந்துஜா என பல்வேறு கலைஞர்கள் நடிக்கின்றனர்.
மிகப்பெரிய பொருட்செலவில் ஏஜிஎஸ் என்டெர்டெய்ன்மென்ட் தயாரிக்கும் இதன் தலைப்பை விஜய் பிறந்தநாள் அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டிருக்கிறது.