சீனாவைச் சேர்ந்த பொழுதுபோக்கு செயலியான டிக்டாக்கை தற்காலிகமாக இந்தியா தடைசெய்தது. டிக்டாக் செயலி மூலம் கலாச்சார சீரழிவு, வெறுப்பு, துஷ்பிரயோகம் மற்றும் பல பாலியல் குற்றங்கள் ஏற்படுவதால்­ கடந்த மாதம் கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய தளத்திலிருந்து நீக்கிவிட்டது.

சிங்கபூரைச் சேர்ந்த பிஐஜிஒ தொழில்நுட்ப நிறுவனம் தொடர்ந்து இச்செயலி படிவேற்றம் செய்யப்படும் வீடியோக்களை கண்காணித்து வருகிறது. இந்த நிறுவனத்தின் பிஐஜிஒ மற்றும் லைவ் வீடியோ செயலி உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானது.

லைவ் வீடியோ செயலி கிட்டத்தட்ட 200 இந்தியன் ஊழியர்களை கொண்டு பதிவேற்றம் செய்யப்பட்டு வீடியோக்கள் மற்றும் கருத்துக்களைக் கண்காணித்துவருகிறது. மேலும் செயலி தரத்தையும் அதன் அடுத்த வெர்ஷனையும் மேம்படுத்திக்கொண்ட இருக்கிறது.

டிக்டாக் தடைமீதான இடைப்பட்ட காலத்தில் ஹெலோ செயலியின் லட்சக்கணக்கான கணக்குகள் சுத்திகரிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்தச் செயலியின் வீடியோக்களை குறிப்பிட்ட வரையறையின் கீழ் கட்டுப்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் குறைந்த தொகையில் இணையதள சேவைகள் கிடைத்தப் பிறகு பல வீடியோ செயலிகள் மக்களின் பரவலாக பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இளைய தலைமுறை முழுவதுமே இசை, நடனம், அலங்காரம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல வகையில் பல செயலிகளை உபயோகப்படுத்த ஆரம்பித்தன. இதில் இந்திய நடிகர் நடிகைகளும்  விதிவிலக்கல்ல.

இந்தச் செயலிகள் மூலம் உலக அளவில் இந்தியாவின் இணையதள பயன்பாட்டில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஹெலோ செயலி கடந்த ஜூன் மாதம் 2018ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு குறைவான கால அளவிலே கிட்டத்தட்ட 40மில்லியன் கணக்குகளை பெற்றுள்ளது.

அதுவே டிக்டாக் செயலி 300மில்லியன் வாடிக்கையாளர்களை இந்தியாவில் மட்டும் கொண்டுள்ளது. ஆப்பிள் மற்றும் கூகுளில் நிறுவனம் டிக்டாக் செயலியின் நீக்கியதை தொடர்ந்து 15மில்லியன் வாடிக்கையாளர்கள் இழந்துள்ளது.

ஆனால் இதன் மீள் வருகையால் இன்னும் பல மில்லியன் வாடிக்கையாளார்களை வரும் ஆண்டுகளில் பெரும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள் ஆராயச்சியாளர்கள். இந்தத் தடையின் மூலம் பல மில்லியன் வாடிக்கையாளர்களை டிக்டாக் எந்த விளம்பரப்படுத்துதல் இல்லாமே பெற்றுள்ளது.

மற்ற செயலிகளைவிட டிக்டாக்கின் வளர்ச்சி மிகப்பெரிய தாக்கத்தை இணையதள உலகில் உருவாக்கியுள்ளது. இதனால் இந்த செயலி மூலமான வெளியிடப்படும் வீடியோக்கள் அனைத்தும் பல கண்காணிப்புகளுக்கு உட்படுத்தவேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக உள்ளது.

இளையதலைமுறையினர் பல வழிகளில் பாதிக்கப்படுவதால் இந்த வீடியோக்கள் அனைத்தையும் குறிப்பிட்ட வரையறையின் கீழ் ஆராய்ந்து வெளியிடும் முறையை டிக்டாக் செயலி செய்ய வேண்டும்  என்பதே ஆராய்ச்சியாளர்களின் கருத்தாக உள்ளது.