ஐபிஎல் தொடங்கிய நாள் முதல் நேற்றுவரை தான் பங்கேற்ற அனைத்துப் போட்டிகளிலும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தோல்வியடைந்திருக்கிறது.

என்னதான் சேசீங் செய்யமுடியாத ஸ்கோரை அடித்தாலும் இந்த ஐபிஎல்லில் பெங்களூர் அணிக்கு ராசியே இல்லை என ரசிகர்கள் சோக முகத்துடன் மைதானத்தைவிட்டு செல்கிறார்கள்.

இத்தனைக்கும் டீமில் கோலி, டீவில்லியர்ஸ் போன்ற அனுபவமிக்க வீரர்கள் இருந்தாலும் சரியான கேப்டன்சி இல்லையென்றால் இந்த நிலைதான் ஏற்படும் என பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொந்தளிக்கிறார்கள்.

இந்த சீசனில் நேற்று (மார்ச் 5) நடைபெற்ற ஆட்டத்தில் முதல்முறையாக கோலியும், டி வில்லியர்ஸும் நிலைத்து நின்று சிறப்பான ஆட்டை வெளிப்படுத்தினார்கள். மொத்த ஸ்கோர் 200யை தாண்டியது. ஆனாலும் தோல்வியடைந்திருக்கிறது கோலி தலைமையிலான அணி.

200 ரன்கள் அடித்தும் தோல்வியடைந்தையொட்டி கேப்டன் கோலியுடன் மேற்கொண்ட நேர்காணலில்: “கடைசி நான்கு ஓவர்களில் 75 ரன்களை உங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், 100 ரன்களைக்கூட உங்களால் கட்டுபடுத்த முடியாது . என்ன தவறு என்று பேசலாம். ஆனால் பெரிதாக சொல்லிக்கொள்ள ஒன்றுமில்லை. இது மிகவும் மோசமான சீசன்” என ஆவேசமாக பேசினார் கோலி.

எற்கனவே கோலி, தோனியின் அறிவுரையினால்தான் ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் ஜெயிக்க முடிந்தது என தோனி ரசிகர்கள் சொல்வது அனைவருக்கும் தெரிந்த கதையே… இந்த ஐந்துபோட்டியின் தோல்விகள் மூலம் ஐபிஎல் போட்டிகளில் கோலியின் கேப்டன்சி மிகவும் மோசமானது என வெளிப்படையாகவே தெரிந்துவிட்டது.

பெரும்பாலும் வயதானவர்களை டீமில் வைத்துக்கொண்டு தோனி ஒவ்வொருமுறையும் ப்ளே ஆஃப் வரை வந்தது உண்மையிலேயே கேப்டன்சி என ஒன்று இருக்கிறது என கோலியும், கோலியின் ரசிகர்களும் இனியாவது புரிந்துகொள்ளுதல் அவசியம் என்றும் மேலும் கேப்டன்சி என்று ஒன்று உள்ளதை கோலிக்கு தெரியாது கோபப்பட மட்டுமே தெரியும் என்றும் கிரிக்கெட் ரசிகர்கள் கோலியை சமூகவலைதளங்களில் வருத்தெடுத்துள்ளனர்