இதுவரைக்கும் நடைமுறையில் இருந்த டாஸ் போடும் நடைமுறைக்குப் பதில், ட்விட்டர் வாக்கெடுப்பு அமல்படுத்தி யார் முதலில் விளையாட வேண்டும் என தேந்தெடுக்கலாம் என்று ஐசிசி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இன்னும் சில மாதங்களில் தொடங்கவுள்ள நிலையில்  சர்வதேச கிரிகெட் கவுன்சில் (ஐசிசி) புதுப்புது அம்சங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்தத் தொடரில் சர்வதேச ஒருநாள் போட்டியை(ODI)  போலவே வீரர்கள் அவர்களின்  ஜெர்சி எண்களுடன் விளையாட அனுமதிக்கப்படுவதாக சில நாட்களுக்கு முன்பு ஐசிசி அறிவித்திருந்தது.

இந்நிலையில்,  வீரர்களின் ஜெர்ஸியில் அவர்களின்  இன்ஸ்டாகிராம் ஐடியையும் அச்சிட்டுக்கொள்ளலாம் எனவும் இந்த அம்சங்கள் இளைஞர்களை ஈர்க்கும் எனவும் ஐசிசி தெரிவித்திருக்கிறது. இதேபோல இதுவரைக்கும் நடைமுறையில் இருந்த டாஸ் போடும் நடைமுறைக்குப் பதில், ட்விட்டர் வாக்கெடுப்பு (Twitter Poll) அமல்படுத்தப்படவிருக்கிறது. இதன்படி போட்டியை நடத்தும் நாட்டிலிருக்கும் யூசர்கள் எந்த அணி பேட்டிங் பௌலிங் என்பதை முடிவுசெய்யலாம் என அறிவித்துள்ளது.

இதனையடுத்து, சுற்றுப்புற வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸைத் தாண்டினால் வீரர்கள் ஷார்ட்ஸ் அணிந்து விளையாடவும் அனுமதிக்கப்படுவார்கள். இதுதவிர வர்ணனையாளர்கள் ஃபீல்டருக்கு அருகே நிற்க அனுமதித்தல், நோ பால் மற்றும் டாட் பால்களை `Fault’ மற்றும் `Ace’ என அழைப்பது போன்ற புதிய அம்சங்களையும் சேர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.