சீனாவில் ஷூஜியாங் மாகாணத்தைச் சேர்ந்த பான், தன் மனைவியின் காதலை சோதிக்க நினைத்து  நடுரோட்டில் வாகனத்தின்முன் விழச்சென்றார். பின்பு வாகனத்தில் மோதி படுகாயம் அடைந்த சம்பவம் போக்குவரத்து கேமராவில் பதிவாகியுள்ளது.

ஷீஜியாங் மாகாணத்தில் உள்ள லிசுய்  நகரத்தைச் சேர்ந்த பான்-சௌவ் தம்பதியினர் நேற்று இரவு வெளியில் சென்றபோது இருவருக்கும் மோதல் ஏற்பட்டது.  அப்போது பான் தன்னுடைய மனைவி எந்த அளவிற்கு தன்னை காதலிக்கிறார் என்பதனைச் சோதிக்க முயன்றுள்ளார். சௌவ் தன்னைக் காப்பற்ற முற்படுகிறாரா இல்லையா என்று எண்ணி, பான் நடுரோட்டில் நின்று வாகனங்களின்முன் விழச்சென்றுள்ளார். அவர் மனைவி எவ்வளவு தடுத்தும் பான், சௌவ்வின் கையை உதறிவிட்டு மறுபடியும் வாகனங்களின்முன் விழச்சென்றுள்ளார். அப்பொழுது எதிரே வந்த ஒரு வேன் அவரை இடித்து தள்ளியது. அதனையடுத்து சௌவ், பானை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

இதுகுறித்து காவல்துறையிடம் பான் கூறுகையில், “எனக்கும் என் மனைவிக்கும் மோதல் ஏற்பட்டது, அதனால் அவளை அழைத்துக்கொண்டு வெளியில் குடிப்பதற்காகச் சென்றேன். அப்பொழுது அவள் என்னை உண்மையிலே நேசிக்கிறாளா என்பதை தெரிந்துகொள்ளத்தான் வாகனத்தின்முன் விழச்சென்றேன். என் மனைவி என்னைக் காப்பாற்றுவாளா இல்லை அப்படியே சாகட்டும் என விட்டுவிடுவாளா என சோதித்தேன். ஆனால் இறுதியில் எனக்கு அடிப்பட்டுவிட்டது. நான் அவளை சோதித்தது தவறுதான்” என தெரிவித்தார்.