127 தொழிநுட்ப உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதென பொதுத்துறை நிறுவனமான தேசிய தொழிநுட்ப ஆராய்ச்சிக் கழகம் அறிவித்துள்ளது.

இன்றைய இளைஞர்கள் பலர் பி.இ படித்து முடித்து வேலைவாய்ப்பைத் தேடி அலைந்துகொண்டிருக்கிறார்கள். இருப்பினும், ஒவ்வொரு ஆண்டும் தேர்ச்சி பெறும் மாணவர்களில் ஒரு சிலருக்கே வேலைவாய்ப்பு கிடைக்கிறது. இந்நிலையில் தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கழகத்தில் மொத்தம் 127 தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.  இதில் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 52 இடங்களும், கணினி அறிவியல் பிரிவில் 75 இடங்களும் உள்ளன.

இந்த வேலைவாய்ப்பைப் பெற பொறியியல் துறையில் எலெக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேஷன், எலெக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேசன், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஜினீயரிங், கம்ப்யூட்டர் டெக்னாலஜி, இன்பர்மேஷன் டெக்னாலஜி போன்ற ஏதேனும் ஒரு பிரிவுகளில் பட்டப்படிப்பு அல்லது டிப்ளோமா முடித்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து வருகின்ற ஏப்ரல் 4-ஆம் தேதி மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். விண்ணப்பிதவர்கள் அனைவருக்கும் கணினி வழித்தேர்வு நடைப்பெறும், அதில் தேர்ச்சி பெறுபவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத்தேர்வில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் 35,400 முதல் 1,12,400 ரூபாய் வரை மாதம் சம்பளம் வாங்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

விண்ணப்பிக்க மற்றும் கூடுதல் விவரங்களைப் பெற https://ntrorectt.in/ntro/home என்ற இணையதளத்திற்குச் செல்க.