ஆஸ்திரேலியாவில் நடந்த மருத்துவ மாநாட்டுக்கு சென்ற இந்திய வம்சாளியை சேர்ந்த பெண் மருத்துவர் சிட்னி நகரில் மீட்கப்பட்ட அவரின் காரில் இருந்த   சூட்கேசில் சடலமாக மீட்டகப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரீத்தி ரெட்டி(32), ஆஸ்திரேலியாவில் பல் மருத்துவராக பணிப்புரிந்து வருகின்றார். இவர் குடும்பம் இந்திய வம்சாவளியை சேர்ந்தது. இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சிட்னியில் நடைப்பெற்ற மருத்துவ மாநாட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் இரவாகியும் அவர் வீட்டுக்கு திரும்பாததால் பிரீத்தியின் பெற்றோர் காவல்துறையினரிடன் புகார் அளித்திருந்த நிலையில் காவல்துறையினர் தீவிர விசாரனையில் ஈடுப்பட்டனர். விசாரணையில் பிரீத்தக்கும் ஒருவருடன் காதல் இருந்ததாகவும் அந்த காதலில் முறிவு ஏற்பட்டதாகவும், மேலும் சிட்னி மருத்துவ மாநாட்டில் இருவரும் கலந்து கொண்டுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. இவர்கள் மாநாட்டிற்கு பிறகு ஒரு ஹோட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளனர் என்பதும் மேற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இதற்கு முந்தைய நாளான ஞாயிற்றுக்கிழமை மெக்டொனல்ஸ்-ல் காலை உணவு சாப்பிட்டுவிட்டு பில் கட்டும் காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது என காவல்துறையினர் தகவல் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து விசாரணை நடந்துக் கொண்டிருந்த வேளையில் பிரீத்தியின் கார் நிற்கும் இடம் குறித்த தகவல் கிடைத்தவுடன் விரைந்து சென்றப்போது அக்காரின் டிக்கியில் ஒரு சூட்கேஸ் கிடைத்தது. அதில் பிரீத்தி ரெட்டு கத்தியால் குத்தப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். பிரேத பரிசோதனைக்காக பிரீத்தி ரெட்டியின் உடலை மருத்துவமனை அனுப்பி வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணை நடந்துக் கொண்டிருந்த வேளையில் பிரீத்தியின் காதலர் சிட்னியில் சாலை விபத்தில் உயிரிழந்தது குறிப்பிடதக்கது.