க்லாண்டில் அமைந்துள்ள கலிபோர்னியா உயர்நீதி மன்றம் கடந்த சில மாதங்களாக சுகாதார பிரச்சனைகள் தொடர்பாக கிட்டதட்ட 13000 வழக்குகளை சந்தித்திருக்கிறது.

ஜான்சன் & ஜான்சன் பொருட்களளைப் பயன்படுத்தியால் கல்நார் சம்மந்தமாக நோயால் பாதிக்கப்பட்டு ஒரு பெண்ணிற்கு கேன்சர் தொற்று ஏற்பட்டது தொடர்பான வழக்கு இந்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அப்பெண்ணிற்கு 29மில்லியன் டாலர் இழப்பீடு வழக்க உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக ஜான்சன் & ஜான்சன் அளித்துள்ள விளக்கமானது “நாங்கள் இந்த தீர்ப்பை மதிக்கிறோம், ஆனால் எங்கள் பொருட்களின் மீதான அறிவியல், விஞ்ஞான ஒழுங்குமுறை முடிவுகள் இன்னும் தரப்படவில்லை” என்று கூறியுள்ளது.

இந்நிலையில் ஏற்கனவே டெர்ரீ லீவிட் என்பவர் தொடர்ந்த வழக்கில் ஜான்சன் & ஜான்சன் மற்றும் ஷவர் டூ ஷவர் பவுடர் உபயோகிப்பதால் மெசொடெல்லொமா நோய் உருவாகும் வாய்ப்புள்ளது பற்றி கண்டறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.