குருகுகொளக் குளித்த கெண்டை அயலது
உருகெழு தாமரை வான்முகை வெரூஉம்
கழனியம் படப்பைக் காஞ்சி யூர
ஒருநின் பாணன் பொய்ய னாக
உள்ள பாணர் எல்லாம் 5
கள்வர் போல்வர்நீ அகன்றிசி னோர்க்கே.

ஒரு பெரிய குளம்.

அந்தப் பெரிய குளத்தில் அழகான ஒரு தாமரை மொடு தண்ணீருக்கு மேல் அழகாக நீட்டிக் கொண்டிருக்கிறது.

அந்தப் பெரிய குளத்தில் அந்த வெள்ளைத் தாமரை மொட்டுக்குப் பக்கத்தில் அழகான ஒரு வெள்ளை அன்னப்பறவை நின்று கொண்டிருக்கிறது.

ஒரு கெண்டை மீன் அந்த அன்னப்பறவைக்குப் பக்கத்தில் வந்து நின்றுகொண்டிருக்கிறது.

அந்த அன்னப்பறவை தனக்கு முன்னால் வந்து நின்று கொண்டிருக்கிற கெண்டை மீனைத் தன் அலகால் கொத்திப் பிடிக்கிறது. அன்னப்பறவையின் பிடியில் இருந்து

அந்தக் கெண்டை மீன் தப்பி ஓடிவிட்டது.

அந்தக் கெண்டை மீன் அந்தப் பெரிய குளத்தில் உள்ள வெள்ளைத் தாமரை மொட்டை பார்க்கும் போதெல்லாம் அது தன்னை விழுங்க வந்த நாரை என்று நினைத்துக்கொண்டு அது பயந்து பயந்து தண்ணீருக்குள் மூழ்கி ஒளிந்து கொள்கிறது.

-ஓரம் போகியார்
குறுந்தொகை 127