கார்புறத் தந்த நீருடை வியன்புலத்துப்
பலர்புகு தரூஉம் புல்லென் மாலை
முல்லை வாழியோ முல்லை நீநின்
சிறுவெண் முகையின் முறுவல் கொண்டனை
நகுவை போலக் காட்டல் 5
தகுமோ மற்றிது தமியோர் மாட்டே.

 

இது எங்கள் நிலம்.

மழை எங்களுக்குப் போதுமான அளவுக்குப் பெய்கிறது. ஏரி நிரம்பியிருக்கிறது.

காடுகளில் மக்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். பொழுது மறைந்து கொண்டிருக்கிறது.

நான் வெளிநாட்டில் இருந்து இப்போதுதான் ஊருக்கு வந்து கொண்டிருக்கிறேன்.

வழி எங்கும் முல்லைப்பூக்கள் பூத்துக் குலுங்கிக்கொண்டிருக்கிறது.

என் மனைவியைத் தனிமையில் தவிக்கவிட்டு, நான் அவளைக் கொடுமைப் படுத்தியதால் இந்த முல்லைப்பூக்கள் என்னைப் பார்த்து ஏளனமாகச் சிரிப்பதைப் போல் எனக்குத் தோன்றுகிறது.

-கருவூர்ப் பவுத்திரனார்
குறுந்தொகை 162