இடிக்குங் கேளிர் நுங்குறை ஆக 
நிறுக்க லாற்றினோ நன்றுமற் றில்ல
ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கிற்
கையில் ஊமன் கண்ணிற் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போலப்         5
பரந்தன் றிந்நோய் நோன்றுகொளற் கரிதே.

அழகான ஒரு மலைக் கிராமம்.

அந்தக் கிராமத்தில் ஒரு பெரிய பாறை இருக்கிறது.

அந்தப் பாறையில் பசுவெண்ணை குவித்து வைக்கப்பட்டிருக்கிறது.

ஒரு இளைஞன் அந்த வெண்ணையைக் காவல் காத்துக்கொண்டிருக்கிறான்.

பொழுது கிழக்கே இருந்து மேற்காமல் போய்க்கொண்டிருக்கிறது.

வெண்ணை வெயிலில் உருகி ஓடுகிறது.

காவலுக்கு உட்கார்ந்திருக்கிற அந்த இளைஞன், உருகி ஓடுகிற அந்த வெண்ணையை, அவன் இரண்டு கண்களாலும் பார்த்துக் கொண்டிருக்கிறான்.

அந்த வெண்ணையைப் பாதுகாக்கவும், அந்த வெண்ணையை தின்று அனுபவிக்கவும் முடியாதபடி கடவுளால் அந்த இளைஞன் வஞ்சிக்கப் பட்டிருக்கிறான்.

அவன் பிறவியிலேயே ஊமை.

அவனுக்குப் பிறவியிலேயே இரண்டு கைகளும் இல்லை.

-வெள்ளி வீதியார்-
குறுந்தொகை 58