கொழுஞ் சுளைப் பலவின் பயம் கெழு கவாஅன், 
செழுங் கோள் வாங்கிய மாச் சினைக் கொக்கினம்
மீன் குடை நாற்றம் தாங்கல்செல்லாது,
துய்த் தலை மந்தி தும்மும் நாட!
நினக்கும் உரைத்தல் நாணுவல்- இவட்கே5நுண் கொடிப் பீரத்து ஊழ் உறு பூ எனப்
பசலை ஊரும் அன்னோ; பல் நாள்
அரி அமர் வனப்பின் எம் கானம் நண்ண,
வண்டு எனும் உணராவாகி,
மலர் என மரீஇ வரூஉம், இவள் கண்ணே.10

“தலைவா…”

“உன்னிடம் சொல்ல எனக்கு வெக்கமாக இருக்கிறது..”

“நீ எங்கள் தினைக்காட்டுக்கு வந்து நீ என் தோழியை சந்தோசப்படுத்தினாய்…”

“என் தோழி உன் மேல் பெருங்காதல் கொண்டிருக்கிறாள்…”

“என் தோழியின் கண்கள் நீலநிறத்தில் அழகாக ஒளிவீசிக் கொண்டிருந்தது.”

“அழகாக நீலநிறத்தில் ஒளிவீசிக்கொண்டிருந்த என் தோழியின் கண்கள் ‘வாடி வதங்கிய பீர்க்கம் பூ’ மாதிரி நிறம் அழிந்து ஒளியையும் அழகையும் இழந்துவிட்டன.

“தலைவா…”

“என் தோழிக்கு இதுபோல் துன்பங்கள் வராதபடி செய்.”

மதுரை மருதன் இளநாகனார்
நற்றிணை 326