ஊசல் ஒண் குழை உடை வாய்த்தன்ன,
அத்தக் குமிழின் ஆய் இதழ் அலரி
கல் அறை வரிக்கும் புல்லென் குன்றம்
சென்றோர்மன்ற; செலீஇயர் என் உயிர்’ என,
புனை இழை நெகிழ விம்மி, நொந்து நொந்து         5
இனைதல் ஆன்றிசின்- ஆயிழை!- நினையின்
நட்டோர் ஆக்கம் வேண்டியும், ஒட்டிய
நின் தோள் அணி பெற வரற்கும்
அன்றோ- தோழி!- அவர் சென்ற திறமே?

அழதா..

பொறுத்துக்கோ…

அழுது அழுது உன் கண்ணு செவந்து போச்சு…

அழுது அழுது நீயும் இளைச்சுப் போய்ட்டா…

சம்பாத்தியம் பண்ண ஆம்பள வெளிநாடு போகத்தான் செய்யணும்…

சம்பாத்தியம் பண்ண வெளிநாடு போறவன்தான் நல்ல ஆம்பள…

நம்ம ஊர்ல இருந்துக்கிட்டுச் சம்பாத்தியம் பண்ண முடியுமா?

நம்ம ஊர்ல என்ன இருக்கு?

யோசித்துப் பார்…

உடை மரங்கள் இருக்கு…

பாறைகள் இருக்கு…

மனைவியை விட்டுப் பிரிஞ்சி போறதுக்கு உன் கணவனுக்கும் கடினமாத்தான் இருந்திருக்கும். மனைவியை தனியாக விட்டுட்டுப் போறோமே என்று அவன் மனசும் அழுது புரண்டு கதறித் துடிச்சித்தான் இருந்திருக்கும்.

ரொம்ப சம்பாத்தியம் பண்ணனும் என்பதில் ரொம்ப உறுதியா இருக்கான் உன் கணவன்.

ஒரு நல்ல கணவன் அவன் மனைவிக்கு நகைகள் வாங்கிப் போட்டு மனைவியை அழகு பாக்கனும்ன்னு ஆசப்படத்தான் செய்வான்.

ஒரு நல்ல கணவன் அவன் மனைவி பணக்காரியா வாழனும்னு தான் அசைப்படுவான்.

உன் கணவன் யாருமே போகத் துனியாக இந்தப் பாலைவனத்தின் வழியாகத் துணிச்சலா போய்ருக்கான்.

உன் கணவனின் ஞாயமான ஆசையையும் அவனுடைய மன உறுதியையும் புரிந்துகொள்.

துறைக்குடி மாவிற் பாலங்கொற்றனார்
நற்றிணை 286