‘கொக்கினுக்கு ஒழிந்த தீம் பழம், கொக்கின்
கூம்பு நிலை அன்ன முகைய ஆம்பல்
தூங்கு நீர்க் குட்டத்து, துடுமென வீழும்
தண் துறை ஊரன் தண்டாப் பரத்தமை
புலவாய்’ என்றி- தோழி!- புலவேன்- 5
பழன யாமைப் பாசடைப் புறத்து,
கழனி காவலர் சுரி நந்து உடைக்கும்,
தொன்று முதிர் வேளிர், குன்றூர் அன்ன என்
நல் மனை நனி விருந்து அயரும்
கைதூவு இன்மையின் எய்தாமாறே. 10

 

இரவு நேரம்.

இருட்டு கடுமையாருக்கு.

குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருக்கிறது.

தாத்தா ஒரு வயல் வரப்பில் உக்காந்திருக்கார்.

தாத்தா நெருப்பு மூட்டித் தீ வளர்க்கிறார்.

நத்தைகளைச் சுடுகிறார்.

தாத்தா உயிருள்ள ஒரு சிறிய ஆமை வைத்திருக்கிறார்.

ஆமை முதுகில் சுட்ட நத்தைகளைத் தட்டித்தட்டி உடைக்கிறார்.

நத்தையில் ஆவி பறக்கிறது.

தாத்தா ருசி பார்க்கிறார்.

வயக்காட்டில் வாடைக்காற்று வீசிக்கொண்டிருக்கிறது.

தாத்தா தீ வளர்க்கிறார்.

நத்தைகளைச் சுடுகிறார்.

பரணர்
நற்றிணை 280