அருளிலர்வாழி- தோழி!- மின்னு வசிபு
இருள் தூங்கு விசும்பின் அதிரும் ஏறொடு
வெஞ் சுடர் கரந்த கமஞ் சூல் வானம்,
நெடும் பல் குன்றத்துக் குறும் பல மறுகி,
தா இல் பெரும் பெயல் தலைஇய யாமத்து, 5
களிறு அகப்படுத்த பெருஞ் சின மாசுணம்
வெளிறு இல் காழ் மரம் பிணித்து நனி மிளிர்க்கும்
சாந்தம் போகிய தேம் கமழ் விடர் முகை,
எருவை நறும் பூ நீடிய
பெரு வரைச் சிறு நெறி வருதலானே. 10

ஒரு மலை.

அது உயரமான மலை.

உயரமான அந்த மலைக்கு மேலே மழை மேகங்கள் வந்து வந்து குவிந்து கொண்டிருக்கின்றன.

அது ஒரு இரவு நேரம்.

சரியான இருட்டு.

மின்னல்கள் மின்னுகின்றன.

இடி முழங்குகிறது.

அது நடுச் சாமம்.

அந்த நடுச் சாமத்தில் மழை கொட்டுகொட்டுன்னு கொட்டித் தீர்த்துவிட்டது.

அந்த மலையில் வைரம் பாய்ந்த ஒரு மரம்.

அந்த மரத்தில் ஒரு பெரிய பாம்பு படுத்திருக்கிறது. அந்தப் பெரிய பாம்பின் வாயில் ஒரு பெரிய ஆண் யானை இருக்கிறது.

அந்தப் பெரிய பாம்பு அந்த பெரிய ஆண் யானையை வைரம் பாய்ந்த அந்த மரத்தோடு சேர்த்து சுத்திச் சுத்தி இறுக்கிக் கெட்டியிருக்கிறது.

உயரமான அந்த மலையில் மின்னல்கள் மின்னிக்கொண்டிருக்கின்றன.

சேந்தம் பூதனார்
 நற்றிணை  261