‘உறை துறந்திருந்த புறவில், தனாது
செங் கதிர்ச் செல்வன் தெறுதலின், மண் பக,
உலகு மிக வருந்தி உயாவுறுகாலைச்
சென்றனர் ஆயினும், நன்று செய்தனர்’ எனச்
சொல்லின் தௌப்பவும், தௌதல் செல்லாய்- 5
செங்கோல் வாளிக் கொடு வில் ஆடவர்
வம்ப மாக்கள் உயிர்த் திறம் பெயர்த்தென,
வெங் கடற்று அடை முதல் படு முடை தழீஇ,
உறு பசிக் குறு நரி குறுகல் செல்லாது
மாறு புறக்கொடுக்கும் அத்தம், 10
ஊறு இலராகுதல் உள்ளாமாறே.

 

ஒரு பெரிய்ய பாலைவனம்.

அந்தப் பாலைவனத்தில் நிலம் கண்டமேனிக்கு வெடிச்சிக் கெடக்கு.

வெயில் கொல்லு கொல்லுன்னு கொன்னுக்கிட்டுருக்கு.

அந்தப் பாலைவனத்தில் ஒரு நரி பசியோடு அலைந்து கொண்டிருக்கிறது.

அந்த நரி அலைந்து அலைந்து கடைசியில் அது ஒரு இரையைக் கண்டுபிடித்திருக்கிறது.

சருகுகள் அந்த இரையை மூடிக் கொண்டிருக்கின்றன.

அது மனிதப் பய பிணங்கள்.

பிணங்கள் அழுகு நாத்தம் நாறிக் கொண்டிருக்கிறது.

அந்தப் பாலைவன மக்கள் வழிப் போக்கர்களைக் கொன்று பிணங்களை அங்கே வீசி எறிந்திருக்கிறார்கள்.

பிணங்கள் அழுகி முடை நாத்தம் நாறிக் கொண்டிருக்கிறது.

இந்தப் பிணங்கள் திங்க ஆகாதுன்னுட்டு நரி அழுகிய அந்தப் பிணங்கள திங்கல.

நரி அங்கருந்து தன் பின்னங்கால்களால் நடந்து திரும்பிப் போய்க் கொண்டிருக்கிறது.

பேயனார்
நற்றிணை 164