வேட்டம் பொய்யாது வலைவளம்சிறப்ப,
பாட்டம் பொய்யாது பரதவர் பகர,
இரும் பனந் தீம் பிழி உண்போர் மகிழும்
ஆர் கலி யாணர்த்துஆயினும், தேர் கெழு
மெல்லம் புலம்பன் பிரியின், புல்லெனப் 5
புலம்பு ஆகின்றே- தோழி! கலங்கு நீர்க்
கழி சூழ் படப்பைக் காண்டவாயில்,
ஒலி காவோலை முள் மிடை வேலி,
பெண்ணை இவரும் ஆங்கண்
வெண் மணற் படப்பை, எம் அழுங்கல் ஊரே. 10

எங்கள் ஊர் ஒரு கடலோரக் கிராமம்.

எங்கள் கடலில் எங்கள் பரதவர்களுக்கு நல்ல மீன்பாடு இருக்கிறது.

பரதவர்கள் அழகாக வியாபாரம் செய்கிறார்கள்.

பரதவர்களிடம் நல்ல பணப்புழக்கம் இருக்கிறது.

எங்கள் ஊரில் மழைக்குக் குறைச்சல் இல்லை.

கம்மா கிடங்கு ஊரணிகளில் எப்போதும் தண்ணீர் இருக்கிறது.

தோட்டக் காடுகள் செழித்திருக்கிற ஊர் எங்கள் .

எங்கள் ஊரில் ஏகப்பட்ட பனைமரங்கள் இருக்கு.

பனைமரங்கள் எங்களுக்கு ஓலை தருகிறது. எங்கள் கொட்டாரத்தை நாங்கள் பனை ஓலைகளால் அடைத்திருக்கிறோம்.

பனைமரங்கள் கள் தருகிறது. கள் வியாபாரம் எங்கள் ஊரில் கொடிகட்டிப் பறக்கிறது.

நாங்கள் எல்லோரும் வேலை செய்கிறோம்.

எங்கள் ஊரில் எங்கள் எல்லாரிடமும் பணப்புழக்கம் இருக்கிறது.

எங்கள் எல்லாருக்கும் சொந்த ஈடு இருக்கிறது.

எங்கள் ஊரில் செழிப்பாக இருக்கிறது.

நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.

உலோச்சனார்
நற்றிணை 38